பல்கலைக்கழகங்களாக மாற்றப்படவுள்ள 19 ஆசிரியர் கலாசாலைகள்
கல்வித் திணைக்களத்தின் கீழுள்ள 19 ஆசிரியர் கலாசாலைகளும் எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பத்தனை ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியின் கண்காணிப்புச் சுற்றுப்பயணமொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் கல்லூரிகளுக்கான ஆட்சேர்ப்பு 3 வருடங்களுக்கு அல்ல, 4 வருடங்களுக்கு நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பட்டதாரி ஆசிரியர்கள்

இதுதொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், இத்திட்டத்தின் மூலம் பட்டதாரி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
இங்கு மாணவர் சங்கங்கள் அமைப்பதற்கு இடம் வழங்கப்படாது.
இந்த விடயத்தை அமைச்சரவையில் முன்வைத்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அவை கல்வி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 1 மணி நேரம் முன்