சமய நிகழ்வுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: பொது சுகாதார சங்கம்
பொது மக்களை ஒன்றுக்கூட்டி மத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவா் உபுல் ரோஹன இந்த எச்சாிக்கையை விடுத்துள்ளாா்.
தலவாக்கலை பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்.
சுகாதார வழிகாட்டுதல்களின்படி, இதுபோன்ற சமய நிகழ்வுளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே சுகாதார நெறிமுறைகளை மீறும் அமைப்பாளர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உபுல் ரோஹன தொிவித்துள்ளாா்..
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளாா்.