மீண்டும் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை!
பெரும்போக பயிர்ச்செய்கைக்காக 100,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் குறித்த யூரியா உரம் நாட்டிற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி பெரும்போக பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முடியும் என குறித்த அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எஞ்சியுள்ள யூரியா
இந்நிலையில், பருவத்தின் தொடக்கத்தில் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கும் பகுதிகளுக்கு தற்போது எஞ்சியுள்ள யூரியா உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த வருட பெரும்போகம் 800,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த மாதம் 11ஆம் திகதி இந்திய கடன் திட்டத்தின் கீழ் 44,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்வனவு செய்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்