உரும்பிராயில் இன்று இரவு இடம்பெற்ற சம்பவம் - பலியான குடும்பஸ்தர் -துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார் (படங்கள்)

accident police jaffna death shooting urumpirai
By Jaso Dec 04, 2021 06:35 PM GMT
Report

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்றைய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் மேல் வெடி வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மானிப்பாய் - கைதடி வீதியில் , உரும்பிராய் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஹயஸ் மற்றும் துவிச்சக்கர வண்டி விபத்தில் , துவிச்சக்கர வண்டியில் பயணித்த , உரும்பிராய் அன்னங்கை பகுதியை சேர்ந்த குணசிங்கம் சுதன் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து அங்கு கூடியோர் , மல்லாகத்தை சேர்ந்த ஹயஸ் சாரதியை பிடித்து நையப்புடைத்துள்ளனர். அதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது பெருமளவானோர் அங்கு கூடி அமைதியின்மையை ஏற்படுத்தி இருந்தனர். அதனால் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததுடன் , வாகன சாரதியை கைது செய்து, வாகனத்தையும் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் 


GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026