இரவோடு இரவாக சிறிலங்கா இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதல்! உடனடியாக அமெரிக்காவிலிருந்து வந்த தகவல்
இராணுவத்தினரின் தாக்குதல்
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினரின் தாக்குதல் நடாத்தியமைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கவலை வெளியிட்டுள்ளார்.
இராணுவத்தினரின் குறித்த செயல் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை ஏற்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடாத்தியமைக்கு கவலை வெளியிட்டுள்ளார்.
Deeply concerned about actions taken against protestors at Galle Face in the middle of the night. We urge restraint by authorities & immediate access to medical attention for those injured.
— Ambassador Julie Chung (@USAmbSL) July 22, 2022
நேற்று இரவு போராட்ட களத்திற்குள் அத்துமீறிய இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டியுள்ளதுடன் அதில் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது போராட்டக்காரர்களை தாக்கி அந்த இடத்தை விட்டு விரட்டியடித்த படையினர் சிறிலங்கா அதிபர் செயலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
