அமெரிக்காவின் அதிரடிமுடிவு : விதிக்கப்பட்டது தடை
ஈரானின் ஆதரவுடன் இயங்குகின்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
குறித்த பயங்கரவாதக் குழுக்களுக்கு புதிய பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுடனான சண்டையினால்
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் விடுத்த அறிக்கையில்,
சிரியாவிலும் ஈராக்கிலும் தொடர்ந்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான சண்டையினால் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளிற்கும் ஆபத்து அதிகரித்துள்ளது.
சர்வதேச தீவிரவாதிகளாகவும்
இந்த மோதல்களின் காரணமாக அதிகளவான வீரர்களும் உயிரிழக்கும் ஆபத்தும், அச்சுறுத்தலும் அதிகரித்து வருகின்றது.
இவற்றிற்கு காரணதாரிகளாக திகழும் கே.எஸ்.எஸ் என்ற ஈரான் ஆதரவு இயக்கமானது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்துடன் தொடர்புடைய ஆறு பேரை சர்வதேச தீவிரவாதிகளாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.