இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு

srilanka united states commerce
By Sumithiran Jul 22, 2021 04:46 PM GMT
Report

வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சவால்மிக்க நாடாக இலங்கை மாறியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பொதுச் சேவைத்துறையில் காணப்படும் ஊழலானது இலங்கையில் செயற்படும் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள முதலீட்டுக்கான சூழல் தொடர்பான அறிக்கையில், அரச துறைகளில் காணப்படும் ஊழல்கள் வெளிநாட்டு முதலீடுகளை தடுக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் எதிர்வுகூறமுடியாத பொருளதார கொள்கை காரணமாக பொருட்களின் பரிவர்த்தனை செலவு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அரசாங்க நிர்வாக சேவையின் வினைதிறனற்ற தன்மை மற்றும் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையற்ற கொள்கைகளும் மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்களை மீள ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்த விரும்பவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு போதுமான சட்டம் மற்றும் விதிகள் காணப்படுகின்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் பலவீனம் மற்றும் முரண்பாடு காணப்படுகின்றது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பல்வேறு உள்ளக மட்டத்தில் ஊழல் காணப்படுவது குறித்து அமெரிக்க பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவலை வெளியிடுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் கொரோனா தொற்றுக் காரணமாக அதனை எட்டமுடியவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து, எந்தவொரு அரசியல் கட்சிகளும் ஊழலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடரவில்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020