இந்திய நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா தலையீடு: ரஷ்யா பரபரப்பு குற்றசாட்டு
இந்திய(India) நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா(America) தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா(Russia) குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா(Maria Zakharova) பத்திரிகையாளர்களுக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் "காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை சதியில் இந்தியர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்துகிறது.
மத சுதந்திரம்
இப்படி இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது.
இந்தியாவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணமாவதுடன் இந்திய பொதுத் தேர்தலை சிக்கலாக்கும் நோக்கில் அமெரிக்கா இப்படி செய்கிறது" என அவர் தெரிவித்துள்ளார்.
உரிமை மீறல்
அண்மையில் மத நம்பிக்கை சார்ந்த உரிமை மீறல்களில் இந்தியா உட்பட 16 நாடுகள் ஈடுபடுவதாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தது.
மேலும் இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |