ஈரானுக்குப் பேரிடி: 100 நாட்களைக் கடந்த அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை நடவடிக்கை வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command - CENTCOM) இதனை தெரிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு CENTCOM இதனை தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கை
இதன் மூலம் ஈரானின் கடல்வழி வர்த்தகம் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக கட்டளையகம் அறிவித்துள்ளது.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை CENTCOM படைகள் மீண்டும் தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன என மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
Today marks 100 days since CENTCOM forces resumed America's steel wall naval blockade against Iran. This effort has helped prevent Iran from exporting at least $25 billion worth of crude oil and constrained the IRGC's ability to fund proxy militias, criminal networks, and terrorism. There have been no exports or imports to Iran by sea except for the humanitarian aid U.S. forces have allowed.
— U.S. Central Command (@CENTCOM) October 22, 2026
இந்த 100 நாள் முற்றுகை நடவடிக்கையின் மூலம் ஈரான் குறைந்தபட்சம் 25 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரானின் வருவாய் தடைபட்டதன் மூலம் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) பிராந்தியத்திலுள்ள போலிப் படைகள் (Proxy militias), குற்றவியல் வலைப்பின்னல்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக CENTCOM சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்கப் படைகளால் அனுமதிக்கப்பட்ட மனிதநேய உதவிகளைத் (Humanitarian aid) தவிர ஈரான் கடல்வழியாக எந்தவொரு ஏற்றுமதியையோ அல்லது இறக்குமதியையோ மேற்கொள்வது முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது என CENTCOM மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |