அமெரிக்காவில் குடியேற விருப்பமா..! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
ஒரு பக்கம் நீண்ட காலமாக அமெரிக்காவில்(us) சட்டவிரோதமாக தங்கியிருந்தார்கள் எனத் தெரிவித்து சட்ட விரோத குடியேற்றவாசிகளை நாடுகடத்தும் ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) மறு பக்கம் அமெரிக்காவில் குடியேற ஆர்வமுள்ளவர்களுக்கான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
தற்போது இலவச அமெரிக்க குடியுரிமையை வழங்குவதற்காக 'கிரீன் கார்ட்' லொட்டரி திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்கு மக்கள் பணம் செலுத்த அனுமதிக்கும் 'தங்க அட்டை' முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
5 மில்லியன் டொலர் கட்டணத்தில் அமெரிக்க குடியுரிமை
ஊடகங்களுக்குப் பேசிய அவர், பணக்கார வெளிநாட்டினர் 5 மில்லியன் டொலர் கட்டணத்தில் அமெரிக்க குடியுரிமையைப் பெறலாம் என்றும், இது அவர்களுக்கு அமெரிக்காவில் வசிக்கும் உரிமையையும், வேலை செய்யும் மற்றும் வணிகம் செய்யும் உரிமையையும் வழங்கும் என்றும் கூறினார்.
ரஷ்ய செல்வந்தர்களுக்கும் வாய்ப்பு
புதிய 'தங்க அட்டை' விற்பனைத் திட்டம் சுமார் இரண்டு வாரங்களில் தொடங்கும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டார். இந்த புதிய 'தங்க அட்டை' திட்டத்தை ரஷ்யாவில் உள்ள செல்வந்தர்களுக்கும் திறக்க முடியும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 7 மணி நேரம் முன்
