செம்மணி மனிதப்புதைகுழிக்காக குரல் கொடுத்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழியில் 140 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மட்டுமன்றி, குழந்தையின் பால்போத்தல், பாடசாலை புத்தகப்பை, உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயம் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ (Summer Lee) தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அக்கறை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீயும் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “செம்மணி மனிதப்புதைகுழியில் 140 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மட்டுமன்றி, குழந்தையின் பால்போத்தல், பாடசாலை புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயம்.
சுயாதீன விசாரணை
இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் நீதி கோரிக்கைகளை வலுப்படுத்துவதாகவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
The mass graves discovered in Chemmani included a baby bottle, schoolbags, and children's toys among the 141 skeletons. This is yet another reminder of the terrible atrocities committed against the Tamil people.
— Rep. Summer Lee (@RepSummerLee) September 15, 2025
We must continue to demand an independent investigation to finally… https://t.co/iZuSstNjFY
நாம் தொடர்ந்து சுயாதீன விசாரணையை வலியுறுத்த வேண்டும். அதுவே நீதி நோக்கி நகரும் பாதை” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இதற்கு முன்னர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் டெபோரா ரோஸ் ஆகியோரும் தமது எக்ஸ் தளப்பதிவுகள் ஊடாக செம்மணி சம்பவம் குறித்து ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
