இலங்கை அரசிற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு : ஜூலி சங் உறுதி
நாட்டில் ஜனநாயக ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தைத் தொடர்ந்தும் ஊக்குவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் (US) தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவிச் செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், இலங்கையின் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் தமது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா ஒத்துழைப்பு
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவை தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது கவலையை பகிர்ந்து கொண்டனர்.
During today’s meeting with our interagency delegation, representatives from civil society shared continued concerns about pending and new legislation like the Prevention of Terrorism Act, Online Safety Act, and NGO Bill. The United States will continue to encourage the new… pic.twitter.com/rNE0JOttHF
— Ambassador Julie Chung (@USAmbSL) December 6, 2024
இந்தநிலையில் ஊழலுக்கு எதிராக அதிக பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை மக்களின் குரல்களைப் பிரதிபலிக்கும் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்.
மேலும், இலங்கையின் எதிர்காலம் அதன் மக்களால் இயக்கப்படுகிறது, அவர்களின் குரல்களையும் பங்களிப்புகளையும் பிரதிபலிக்கும் நிர்வாகத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பல தரப்பினருடன் சந்திப்பு
இதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவிச் செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) இடையிலான சந்திப்பு நேற்று (06) இடம்பெற்றுள்ளது.
Today, during our meeting with Prime Minister Harini Amarasuriya, we had a productive discussion on Sri Lanka’s priorities and strengthening cooperation in education, agriculture, anti-corruption measures, and equitable economic growth. Our U.S. delegation, led by @State_SCA… pic.twitter.com/ODJPvngFkz
— Ambassador Julie Chung (@USAmbSL) December 6, 2024
இலங்கையின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள டொனால்ட் லு (Donald Lu) தலைமையிலான தூதுக்குழுவினர், முன்னதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya), வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath), சபாநாயகர் அசோக ரங்வல (Ashoka Ranwala) உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்த கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |