ஈழத்தமிழர் பிரச்சினை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்க அமைப்புகள்
ஈழத் தமிழர்களின் போராட்டத்தை தீர்க்கப்படாத காலணித்துவ பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம், அமெரிக்க (United States) தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பல தசாப்தங்களாக செயலற்ற தன்மை காரணமாக, இனப்படுகொலைக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
2025 ஆகஸ்ட் 17, என்ற திகதியிடப்பட்ட ஒரு கூட்டுக் கடிதத்தில், உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு , இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தமது கோரிக்கையை முன்வைத்துள்ளன.
முள்ளிவாய்க்கால் படுகொலை
எனவே மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், தோல்வியடைந்த தீர்மானங்களுக்கு கொள்கை ரீதியான புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளுமாறு, குறித்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்தநிலையில் 2009 முதல் பேரவையின் தீர்மானங்களை இலங்கை தொடர்ந்து நிராகரிப்பதை இந்த அமைப்புகள் கண்டித்துள்ளன, மேலும் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்குப் பின்னர் பதினாறு ஆண்டுகளில் எந்தவொரு உறுதியான பொறுப்புக்கூறலையும் வழங்க பேரவையினால் இயலாமல் போயுள்ளமை குறித்தும், அமெரிக்க தமிழ் அமைப்புக்கள்,தமது ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.
இது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் செயல்முறையில் தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாக அமெரிக்க அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
செம்மணிப் புதைகுழிகள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி தளத்தின் ஒரு பகுதியான சிந்துப்பாத்தியில் 140 க்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி, சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கான அவசரத் தேவையை, அமெரிக்க தமிழ் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்தவிடயம், சுயாதீனமான சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கான அவசரத் தேவையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மனித உரிமைகள் ஆணையம்
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் மைய அரசியல் பிரச்சினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் 1948 ஆம் ஆண்டு சுதந்திர செயல்முறை "முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்கம் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க தமிழ் அமைப்புக்கள், பிரித்தானியர்கள், 1948 இல் தமிழர்களிடமிருந்து எந்த ஆணையையும் கோராமல் சிங்களவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர் என்று தெரிவித்துள்ளன.
அதாவது தமிழ் தேசத்திற்கான சுயநிர்ணயக் கொள்கையை நிலைநிறுத்தத் தவறிய ஒரு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்க செயல்முறையை மேற்கொண்டனர் என்றும் அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
எனவே சர்வதேச நீதிமன்றத்தின் முன் மொரீசியஸ் வழக்குடன் இணையாக, இந்த வரலாற்று அநீதியை சரிசெய்ய ஐ.நா.வுக்கு அதிகாரமும் பொறுப்பும் உள்ளதாக அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் வாதிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
