சீனாவுக்கான நூறு சதவீத வரி விதிப்பு: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
சீனாவுக்கான (China) நூறு சதவீத வரி விதிப்பை கைவிடுவதாக அமெரிக்கா (United States) தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதையடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி
வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும், நூறு சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்தநிலையில், ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில் ஏ.பி.இ.சி எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு ஒக்டோபர் 31 ஆம் திகதி மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
வரி விதிப்பு
இதில் பங்கேற்பதற்காக தென்கொரியா செல்லும் டொனால்ட் ட்ரம்ப் அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளார்.

இதனடிப்படையில், சீனாவுக்கு நூறு சதவீத வரி விதிப்பை கைவிடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்