அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவு : ஈரானிலிருந்து வெளியான அறிவிப்பு
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது போருக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையின் பிரதிபலிப்பு என ஈரான் அரசு கூறியுள்ளது.
மனசாட்சி அல்லது விலைவாசி உயர்வு ஆகியவற்றால் போருக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என ஈரானின் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க மக்களின் முடிவை ஆதரிக்கிறோம்
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மனசாட்சியோ அல்லது விலைவாசி உயர்வோ, அமெரிக்கர்கள் போர் வேண்டாம் எனக் கூறியிருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்.

அமெரிக்க அரசு, சர்வதேச அளவில் பணம் கொடுப்பவர்களுக்கும் மிரட்டிப் பணம் பறிப்பவர்களுக்கும், சேவை செய்ய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டால், வேண்டாம் எனும் பதிலே அவர்களுக்குக் கிடைக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |