உச்சக்கட்ட பரபரப்பு: அதிகாரத்தை கைப்பற்றிய ஜனநாயக் கட்சி: ட்ரம்ப்பின் கட்சிக்கு பின்னடைவு
புதிய இணைப்பு
அமெரிக்க செனட் சபையின் பெரும்பான்மையை ஜனநாயக் கட்சி கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினரின் வசம் இருந்த இந்த செனட் சபையின் பெரும்பான்யை பெறுவதற்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்டன.
இந்நிலையில் சற்றுமுன்னர் வரையில் வௌியாகியுள்ள அமெரிக்க பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் செனட் சபையில் ஜனநாயக கட்சி 51 இடங்களை கைப்பற்றியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி இதுவரையில் 39 இடங்களை பெற்றுள்ளது.
முதலாம் இணப்பு
அமெரிக்காவில் நடைபெறும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தொடர் முன்னிலையைப் பெற்று வருகிறது
ஆளும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்கு இது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற அதிகாரம் யாருக்குப் போகிறது என்பதை நிர்ணயிக்கும் இவ் இடைத்தேர்தலில், செனட் (Senate) மற்றும் பிரதிநிதிகள் சபை (House of Representatives) இடங்களுக்கான வாக்கெடுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடும் போட்டி
தற்போதைய நிலவரப்படி, தேர்தல் களத்தில் முக்கியக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், பல முக்கியத் தொகுதிகளிலும் இடங்களிலும் ஜனநாயகக் கட்சி (Democratic Party) முன்னிலை வகித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயக் கட்சி செனட் சபையில் 45 இடங்களையும், குடியரசுக் கட்சி 34 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
அதேநேரம் பிரதிநிதிகள் சபையில் 64 இடங்களை ஜனநாயக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், குடியரசுக் கட்சி 29 இடங்களையே பெற்றுள்ளது.
ஈரான் விவகாரம்
அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல், தற்போதைய ஆட்சியின் மீதான மக்களின் தீர்ப்பாகக் கருதப்படுகிறது.

ஈரான் விவகாரம் உள்ளிட்ட வெளியுறவுக் கொள்கைகள், விலைவாசி உயர்வு, குடியேற்றப் பிரச்சினை, பொருளாதாரம் ஆகியவை தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதாரச் சூழல், சமூக நலத் திட்டங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகிய முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே மக்கள் வாக்களித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |