வெனிசுலா கப்பலில் போதைபொருள் கடத்தல்: அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதல்
வெனிசுலா (Venezuela) கப்பலொன்றின் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வெனிசுலா கப்பலில் போதைபொருள் கடத்தப்பட்டமையினால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருட்கள்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, அமெரிக்க அதிபர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார்.
இந்தநிலையில், சமீப காலமாக வெனிசுலாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும், போதைப் பொருட்களை கடத்தும் கப்பல்கள் மீது அமெரிக்க இராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
வெனிசுலா கடற்கரை
குறித்த பின்னிணியில் தற்போது மீண்டும் வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்ட நிலையில், இது தொடர்பில் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது உத்தரவின் பேரில் போதைப்பொருள் கடத்திய வெனிசுலா நாட்டு கப்பல் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள்
இந்த கப்பலில் பயங்கரவாதிகள் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்ட போது தாக்குதல் நடத்தப்பட்டது.
கப்பல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தும் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையது என்பதை உளவுத்துறை உறுதிப்படுத்தியது.
சர்வதேச நீர்நிலைகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அமெரிக்கப் படைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
