இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் வேட்டை! இடைமறிக்கப்பட்ட ஈரானில் இருந்து வந்த கப்பல்
ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற "M/T Majestic X" என்ற அனுமதிக்கப்படாத மற்றும் எந்தவொரு நாட்டுரிமையும் அற்ற கப்பலை இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க பாதுகாப்புத் துறை இடைமறித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, “சட்டவிரோத வலையமைப்புகளை முறியடிக்கவும், ஈரானுக்கு ஆதரவளிக்கும் கப்பல்களைத் தடுக்கவும் உலகளாவிய கடல்சார் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்” என அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
பென்டகனின் எச்சரிக்கை
இதேவேளை, இந்த வார தொடக்கத்தில் ஈரானிய எண்ணெயைக் கடத்திச் சென்றதற்காகத் தடை விதிக்கப்பட்டிருந்த "M/T Tifani" என்ற மற்றொரு கப்பலையும் அமெரிக்கப் படைகள் சோதனையிட்டிருந்தன.
Overnight, U.S. forces carried out a maritime interdiction and right-of-visit boarding of the sanctioned stateless vessel M/T Majestic X transporting oil from Iran, in the Indian Ocean within the INDOPACOM area of responsibility.
— Department of War 🇺🇸 (@DeptofWar) April 23, 2026
We will continue global maritime enforcement to… pic.twitter.com/SWF6Jt9Ci4
சர்வதேச கடல் பகுதிகள் தடை செய்யப்பட்ட கப்பல்களுக்கான புகலிடம் அல்ல என்று பென்டகன் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், திறந்த கடல் பரப்பானது இத்தகைய சோதனைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க கடற்படைக்கு பாதுகாப்பான இடமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |