அமெரிக்காவிற்கு மீன் மற்றும் கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்ய இலங்கைக்கு அனுமதி

Lankasri United States of America Export
By Abi May 11, 2026 10:53 AM GMT
Report

இலங்கையின் கடல் நண்டு ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு கடல் சார் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் குறித்த விடயத்தை அறிவித்துள்ளது. 

மேலும், அமெரிக்காவின் கடல் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின் (Marine Mammal Protection Act) கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.

மோசமான வானிலை: இயந்திரக் கோளாறாலுக்கு உள்ளான சிவகங்கை கப்பல்!

மோசமான வானிலை: இயந்திரக் கோளாறாலுக்கு உள்ளான சிவகங்கை கப்பல்!

ஏற்றுமதிகள் தற்காலிகமாக பாதிப்பு 

அதன்படி, அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் கீழ் செயல்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA), இலங்கையின் நண்டுப் பிடிப்பு நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்குமுறை அமைப்புகள் அமெரிக்க தரநிலைகளுக்கு இணங்க உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு மீன் மற்றும் கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்ய இலங்கைக்கு அனுமதி | Us Government Approves Sri Lankan Crab Exports

2025 நவம்பரில் அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பொன்றினால் இந்த ஏற்றுமதிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்தன.

எனினும், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சமர்ப்பித்த அறிவியல் தரவுகள் மற்றும் உண்மை தகவல்களை ஆய்வு செய்த பின்னரே NOAA இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதன் மூலம், அமெரிக்காவிற்கு மீன் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஒப்பீட்டுத் தகுதி மதிப்பீட்டை (Comparability Finding) இலங்கை பெற்றுள்ளதோடு, இந்த அனுமதி 2029 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.

உர விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

உர விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

கடற்றொழில் முறைகள்

கடல் நண்டுகள் உள்ளிட்ட இலங்கையின் கடல் சார் உணவுப் பொருட்கள் பொருட்களின் ஏற்றுமதி அமெரிக்காவிற்கு தடையின்றி மேற்கொள்ள முடியும்.

அமெரிக்காவிற்கு மீன் மற்றும் கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்ய இலங்கைக்கு அனுமதி | Us Government Approves Sri Lankan Crab Exports

மேலும், டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்கள் போன்ற கடல் பாலூட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த கடற்றொழில் முறைகள் இலங்கையில் பின்பற்றப்படுகின்றமை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்றம், நாட்டின் கடற்றொழில் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கவும் முக்கிய பங்காற்றும் என அமைச்சு தெரிவித்துள்ளது.    

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்