2022 இல் இலங்கைக்கான உதவி - அமெரிக்க தூதுவர் வௌியிட்ட தகவல்
2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
புதிய உதவி அடிப்படை உணவுப் பாதுகாப்பை ஆதரிக்கிறது மற்றும் பாடசாலை மதிய உணவுகளுக்கான நிதி, சிறு விவசாயிகளுக்கு உரம் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான காலங்களில் அதிக சுமை
As I reflect on 2022, I’m thinking about the multitude of ways that the US and SL have come together over the last year to make a difference. In 2022 alone, the United States has announced more than $240M in new assistance to Sri Lanka.
— Ambassador Julie Chung (@USAmbSL) December 31, 2022
"இலங்கையில் உள்ள SME களுக்கு கடன்கள், பயிற்சிகள் மற்றும் உதவிகளை நாங்கள் ஆதரிக்கிறோம், ஏனெனில் அவர்கள் நெருக்கடியான காலங்களில் அதிக சுமையை எதிர்கொள்கின்றனர். இந்த உதவியானது அரசு, தனியார் துறை, சிவில் சமூகத்தின் பங்களிப்பில் உள்ளது. " என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.