மிகப்பெரிய போரின் அறிகுறி! ரஷ்ய டேங்கரை கைப்பற்றிய அமெரிக்கா...
வெனிசுலாவுடன் தொடர்புடைய இரண்டு எண்ணெய் டேங்கர்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இதில் ரஷ்ய கொடியுடன் கூடிய கப்பல் ஒன்று அடங்கும்.
ரஷ்யா மற்றும் சீனாவுடனான பதட்டங்களை அதிகரிக்கக்கூடும் என்ற கவலைகள் இருந்தபோதிலும், தடைசெய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்களை தொடர்ந்து கைப்பற்றுவதற்கு டொனால்ட் ட்ரம்ப் பயப்படவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஐரோப்பிய கட்டளையின் சமூக ஊடகப் பதிவின்படி , அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் கண்காணித்த பின்னர், குறித்த கைப்பற்றல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பெல்லா 1 என்று அழைக்கப்பட்ட இந்த டேங்கர், சட்டவிரோத எண்ணெயை கொண்டு செல்லும் டேங்கர் கப்பல்களின் "நிழல் கடற்படையில்" செயல்பட்டதற்காக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்ய கொடியுடன் கூடிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றிய நிலையில் அதற்கு புடினின் பதில் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |