ஆசிய பசுபிக் வலயத்தில் இலங்கையின் பங்களிப்பு - பலநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சு..!

United States of America Singapore India Ukraine
By Dharu Jun 06, 2023 02:18 PM GMT
Report

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோ மற்றும் சிறிலங்கா அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

ஆசியாவின் பிரதான பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான Shangri-La Dialogue அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் போதே உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் உடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் ஆசிய பசுபிக் வலயத்தில் இலங்கையின் பங்களிப்பு தொடர்பில் பலநாட்டு இராஜதந்திரிகளுடன் சாகல ரத்நாயக்க கலந்துரையாடியுள்ளார்.

இந்து சமுத்திர பாதுகாப்பு

ஆசிய பசுபிக் வலயத்தில் இலங்கையின் பங்களிப்பு - பலநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சு..! | Us India Security Cooperation In The Indian Ocean

மேலும், இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களுடனுமான பேச்சுவார்த்தை இதன் போது இடம்பெற்றுள்ளது.

வல்லரசுகளின் போட்டி மற்றும் வெளி மோதல்களை இந்து சமுத்திரத்தில் இருந்து விலக்கி வைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிலையான மற்றும் சமநிலையான ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குதல், பிராந்திய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, ஆசியாவில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான புவிசார்-அரசியல் விவகாரங்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்புச் செயற்பாடுளை மையப்படுத்தி உரையாற்றிய சாகல ரத்நாயக்க, இந்து சமுத்திர வலயத்தை அமைதி வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மேற்கொண்ட முயற்சிகளையும் தெளிவுபடுத்தினார்.

வல்லரசுகளின் போட்டி மற்றும் வெளி மோதல்

ஆசிய பசுபிக் வலயத்தில் இலங்கையின் பங்களிப்பு - பலநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சு..! | Us India Security Cooperation In The Indian Ocean

வல்லரசுகளின் போட்டி மற்றும் வெளி மோதல்களை இந்து சமுத்திரத்தில் இருந்து விலக்கி வைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், கப்பல் மற்றும் விமானப் பயண சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இலங்கையின் பங்களிப்பை விளக்கினார்.

இதேவேளை, ஷங்ரிலா உரையாடலில் கலந்துகொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உட்பட பல உயர்மட்ட இராஜதந்திரப் பிரதிநிதிகளுடன் சாகல ரத்நாயக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்திய சாகல ரத்நாயக்க, கடந்த சவாலான காலகட்டத்தில் சிங்கப்பூர் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் துறைமுகம் மற்றும் விநியோகத் துறைகள் தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்து சமுத்திர பிராந்திய பிரச்சினை

ஆசிய பசுபிக் வலயத்தில் இலங்கையின் பங்களிப்பு - பலநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சு..! | Us India Security Cooperation In The Indian Ocean

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர் கிரெக் மொரியாட் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலில் கடல்சார் பாதுகாப்பு, மனிதக் கடத்தலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் கூட்டுப் பணியாளர் குழுவின் தலைவர் ஜெனரல் சஹீர் ஷம்ஷாத் மிர்சா மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பிராந்திய உறுதித்தன்மையை மேம்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

ஆசிய பசுபிக் வலயத்தில் இலங்கையின் பங்களிப்பு - பலநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சு..! | Us India Security Cooperation In The Indian Ocean

சாகல ரத்நாயக்க மற்றும் அமெரிக்காவின் இந்து-பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஜோன் அக்விலினோ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில், இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்தார் .

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டின் சிபொல்லாவுடன் இடம்பெற்ற சந்திப்பில், பிராந்தியம் தொடர்பான மனிதாபிமானப் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதுடன், அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் அர்ப்பணிப்பையும் சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார்.

இதன்போது சாகல ரத்நாயக்க மற்றும் இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிசிறி ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள் தொடர்பில் பரவலாக கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026