அமெரிக்காவில் இந்துக்கள் சார்பில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிரடி சட்டம்
அமெரிக்காவில் (USA) முதன்முறையாக இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறு பேசினாலோ வேறு சூழலை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் தண்டனை விதிக்கும் சட்ட யாப்பு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் 25 லட்சத்திற்கும் மேலான இந்துக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.
அந்தவகையில், அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான ஜார்ஜியாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மக்கள் வசித்து வருகின்றனர்.
புதிய சட்ட யாப்பு
இந்த மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் சுவாண்ட் டில், கிளிண்ட் டிக்சன், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜேசன் எஸ்டீவ்ஸ், இம்மானுவேல் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து குறித்த சட்ட யாப்பை செனட் சபையில் அறிமுகம் செய்துள்ளனர்.
உலகில் 100 கோடிக்கும் மேலானவர்கள் பின்பற்றும் இந்து மதம் என்றும், இது உலகில் பழமையான மதங்களில் ஒன்று என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட யாப்பு, மதம், இனம், நிறம், அயல் நாட்டவர் என்ற வேறுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் வரும் என தெரிவிப்படுகின்றது.
கடும் நடவடிக்கை
அத்துடன் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் விரைவில் நடைமுறைக்கு வருவதையடுத்து இந்து மதம், இந்துக்கள் மீதான வெறுப்பு செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியிலான கடும் நடவடிக்கைள் பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT UPDATE: The State of Georgia has introduced SB 375, which formally updates the state's penal code to recognize Hinduphobia and anti-Hindu prejudice, and enables law enforcement and other agencies to consider Hinduphobia while cataloging such discrimination and taking… pic.twitter.com/0TKGgtGb8x
— CoHNA (Coalition of Hindus of North America) (@CoHNAOfficial) April 10, 2025
இதேவேளை, இந்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஒரு புது சட்டம் இயற்றப்படுவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
