ஈரானை செயலிழக்கச் செய்யும் திட்டம் இறுதிக்கட்டத்தில்...! அமெரிக்க திட்டவிட்டம்
ஈரானில் அமெரிக்காவின் நடவடிக்கை மாதங்கள் அல்ல, வாரங்கள் மட்டுமே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ இதனைத் தெரிவித்துள்ளார்.
மார்க்கோ ரூபியோ, முன்னதாகப் பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) மாநாட்டில் மற்ற வெளியுறவு அமைச்சர்களுடனான தனது சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கை
இதன்போது, ஈரானைச் செயலிழக்கச் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மத்திய கிழக்குக்குப் படைகளை அனுப்ப அமெரிக்கா பரிசீலித்து வருகிறதா என்று கேட்கப்பட்ட போது, இராணுவத் தந்திரங்கள் குறித்து விவாதிக்க மாட்டேன் என்று ரூபியோ பதிலளித்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்காவிற்குத் தெளிவான நோக்கங்கள் உள்ளன என்றும் அவற்றை மிக விரைவில் அடையும் தருவாயில் நாங்கள் இருக்கிறோம் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானில் அமெரிக்காவின் நடவடிக்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற கேள்விக்கு நாங்கள் வாரங்களைப் பற்றிப் பேசுகிறோம் மாதங்களைப் பற்றி அல்ல என்று ரூபியோ பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |