வெடிவிழும் என மிரட்டிய அர்ச்சுனா எம்பி! மானிப்பாய் தவிசாளரின் கருத்தால் சபையில் அமளி துமளி

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government Ramanathan Archchuna
By Kajinthan Mar 27, 2026 08:27 PM GMT
Report

தனது காணிக்கு சிவப்பு நோட்டீஸ் ஒட்டினால் வெடிவிழும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மிரட்டியதால் அவரது காணிக்கு சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டவில்லை என மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் கூறியதால் சபையில் கடும் அமளிதுமளி ஏற்பட்டது.

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்விலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.

பெரியவிளான் பகுதியில் உள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் காணியில் பற்றைகள் வளர்ந்துள்ளதால் அதிலிருந்து பாம்புகள் வெளிவந்து குடிமனைகளுக்குள் புகுவதால் மக்கள் அச்ச நிலையில் இருப்பதாகவும், அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச சபையின் உறுப்பினர் எட்வேட் மரியவாசினி கடந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டினார். 

யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கிய குடும்பஸ்தர்! பின்னர் நடந்த விபரீதம்

யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கிய குடும்பஸ்தர்! பின்னர் நடந்த விபரீதம்

சிவப்பு நோட்டீஸ் 

அதற்கு பதிலளித்த தவிசாளர் குறித்த காணிக்கு சிவப்பு நோட்டீஸ் ஒட்டுவதாக தெரிவித்த நிலையில் அது இதுவரை ஒட்டப்படவில்லை. இந்நிலையிலேயே குறித்த விடயம் இன்று சபை அமர்வில் களேபரத்தை ஏற்படுத்தியது.

இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினரான அச்சுதபாயன், “பெண்களை அவதூறாக பேசும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் காணிக்கு நீங்கள் இதுவரை ஏன் சிவப்பு நோட்டீஸ் ஒட்டவில்லை? அந்த நோட்டீஸை எங்களிடம் தந்தால் நாங்கள் ஒட்டுவதாக தானே கூறினோம். ஆனால் தாங்கள் அதனை ஏன் செய்யவில்லை. எங்களிடம் தந்திருந்தால் நாங்களே அந்த நோட்டீஸை ஒட்டி இருப்போம்.

வெடிவிழும் என மிரட்டிய அர்ச்சுனா எம்பி! மானிப்பாய் தவிசாளரின் கருத்தால் சபையில் அமளி துமளி | Mp Archchuna Threatens Govt Officials

அதற்கு பதிலளித்த தவிசாளர் க.ஜெசீதன், ஒரு நோட்டீஸ் ஒட்டுதல், அல்லது ஒரு கடிதத்தை கொடுத்தல் என்பது ஒரு அடையாளப்படுத்தல் தான். அந்த கடிதம் அல்லது நோட்டீஸை விட தாங்கள் இந்த சபையில் கதைத்த விடயமானது ஊடகங்களூடாக காத்திரமாக அடையாளப்படுத்தப்பட்டது.

அந்த காணி வழக்கில் இருக்கிறது என்றால், நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் அந்த காணியை சுத்தம் செய்ய வேண்டும். அத்துடன் அந்த நோட்டீஸை நானோ, அல்லது உறுப்பினர்களோ ஒட்ட முடியாது. ஒரு உத்தியோகத்தரே ஒட்ட வேண்டும்.

நோட்டீஸ் ஒட்டுவோம் என்று கூறிய அடுத்த நாளே அந்த நாடாளுமன்ற உறுப்பினர், நோட்டீஸ் ஒட்ட வருபவர்களுக்கு வெடி விழும் என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறினார். ஆகவே அரச உத்தியோகத்தர்கள் அச்சப்படுகின்றனர். அரச உத்தியோகத்தர்களின் உயிரை பணயம் வைக்க முடியாது.” என்றார்.

மக்களது பாதுக்காப்பு

இந்நிலையில் குறித்த பெரியவிளான் வட்டார உறுப்பினர் எட்வேட் மரியவாசினி கருத்து தெரிவிக்கையில்,

குறித்த பிரச்சினை எனது வட்டாரத்தில் தான் காணப்படுகிறது. நோட்டீஸ் ஒட்டுவதாக கூறிய தவிசாளர், அதனை ஒட்டாமல் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பயப்படுகின்றாரா? 

வெடிவிழும் என மிரட்டிய அர்ச்சுனா எம்பி! மானிப்பாய் தவிசாளரின் கருத்தால் சபையில் அமளி துமளி | Mp Archchuna Threatens Govt Officials

நான் கொழும்பு சென்றதால் கடந்த சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வருகை தர முடியவில்லை. ஆனால் அங்கு உப தவிசாளரர் சுதாகர், என்னில்தான் பிழை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பக்கப்பாட்டு பாடுகிறார். எனது வட்டார பிரச்சினை உப தவிசாளருக்கு என்ன தெரியும்?

குறித்த காணியை விரைவில் சுத்தம் செய்து, மக்களது பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் என காரசாரமான கருத்துகளை முன்வைத்தார்.

இலங்கைக்கு கிடைத்த எரிபொருள் கப்பல்! அநுர - மோடி கலந்துரையாடலால் கிட்டிய பலன்

இலங்கைக்கு கிடைத்த எரிபொருள் கப்பல்! அநுர - மோடி கலந்துரையாடலால் கிட்டிய பலன்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019