ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, ஞானசார தேரர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்துள்ளது.
பயணத் தடை
இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், இந்தத் திறந்த பிடியாணையினை காவல்துறை மா அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்துமாறும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஏற்கனவே கடந்த 2 தினங்களாக ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பகிரங்க பிடியாணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |