ஜெனீவாவில் கையெழுத்தாகவுள்ள அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம்
வளைகுடாப் போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையன்றே கையெழுத்தாகலாம் என்றும், அதற்கான அதிக வாய்ப்புள்ள இடமாக ஜெனீவா உருவெடுத்துள்ளது என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள வாசகங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிராக இஸ்ரேல் சண்டையிட்டு வரும் லெபனானில் நடக்கும் சண்டைகளையும் இந்த ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமைக்குள் ஒப்பந்தத்தின் வாசகங்களை இறுதிசெய்து, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் ஆகியோர் அதில் கையெழுத்திடுவதே இதன் நோக்கமாக இருந்தது.
ஜெனீவாவே சாத்தியமான இடம்
இதற்கான இடம் எதுவும் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை, ஆனால் ஜெனீவாவே மிகவும் சாத்தியமான இடமாகத் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பந்தம் இப்போது தயாராகிவிட்டதால், ஈரான் மீதான புதிய தாக்குதல்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஈரானுடனான போரை நாங்கள் இப்போதுதான் சிறப்பாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம், என்று வியாழக்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறினார்.
ஒப்பந்தத்தின் விதிமுறைகள்
ஆனால், ஈரானிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விவரித்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள், தெஹ்ரான் இதுவரை கோரியவற்றில் பெரும்பாலானவற்றை வழங்குவதாகத் தெரிகிறது .

பெப்ரவரியில் தாக்குதல்களுக்கு உத்தரவிட்ட பிறகு ஈரான் மூடிய ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதைத் தவிர, ட்ரம்ப் கோரியவற்றில் சிறிதளவே அவருக்குக் கிடைத்ததாகத் தெரிகிறது.
ஈரானின் எண்ணெய் மீதான தடைகளை இந்த வரைவு நீக்கும் என்றும், அதன் பில்லியன் கணக்கான டொலர் நிதிகளை முடக்கத்திலிருந்து விடுவிக்கும் என்றும், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்தை இது கோரும் என்றும் ஒரு மூத்த ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |