புடினையும் ஹமாஸையும் வெல்ல விடமாட்டோம்: கங்கணம் கட்டும் அமெரிக்கா
ஹமாஸ் அமைப்பு மற்றும் புடினை வெல்ல இடமளிக்கமாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யப்போர் ஆரம்பமாகி ஒருவருடத்தையும் கடத்த நிலையில் தற்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் ஆரம்பித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யப்போரிற்கு உக்ரைனுக்கு ஆதரவாகவும் ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பாரிய உதவிகளை முன்னெடுத்து வருகின்றது.
இஸ்ரேலுக்கு ஒதுக்கப்படும் நிதியளவு
இவ்வாறான சூழலில் ஹமாஸ் அமைப்பு மற்றும் புடினை தோற்கடிக்காமல் விடமாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. ரஷ்ய அதிபர் புடின் போன்ற கொடுங்கோலர்கள் வெல்லவும் அனுமதிக்க மாட்டோம். இருவருமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார்கள்.
உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை எப்படி ஏற்க முடியாதோ அதேபோல் இஸ்ரேல் மீதான தாக்குதலையும் ஏற்க முடியாது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் மற்றும் புடினை வெல்ல விட மாட்டோம். உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு ஒதுக்கப்படும் நிதியளவு இந்த ஆண்டில் இருந்து அதிகப்படுத்தப்படும்" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்