கடத்தப்பட்ட பெண் ஊடகவியலாளர்...! ஈரானிய ஆதரவு ஆயுதக்குழு மீது அமெரிக்கா சந்தேகம்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டதன் பின்னணியில் ஈரானுடன் தொடர்புடைய கதாயிப் ஹிஸ்புல்லா (Kata'ib Hezbollah) என்ற ஆயுதக்குழு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் (US State Department) தெரிவித்துள்ளது.
சுயாதீன ஊடகவியலாளரான ஷெல்லி கிட்டில்சன் (Shelly Kittleson), செவ்வாய்க்கிழமை மாலை மத்திய பாக்தாத்தில் வைத்துக் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடத்தப்பட்ட ஊடகவியலாளர்
இது குறித்து உலகளாவிய பொது விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டிலான் ஜான்சன் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், இந்தச் சம்பவம் குறித்து வாஷிங்டன் நிர்வாகம் நன்கு அறிந்துள்ளதாகவும் கடத்தப்பட்ட ஊடகவியலாளருக்கு அங்குள்ள அச்சுறுத்தல்கள் குறித்து ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும்" குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடத்தலில் தெஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புடைய ஈராக்கிய ஆயுதக்குழுவான கதாயிப் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்குப் பங்கிருப்பதாக நம்பப்படுகிறது.
புலனாய்வு அமைப்பு
கடத்தலின்போது ஏற்பட்ட வாகன விபத்தைத் தொடர்ந்து இதில் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் ஈராக் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஞ்சியவர்கள் காயமடைந்த நிலையில் ஊடகவியலாளருடன் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர்ச் சூழலைத் தொடர்ந்து செய்தி சேகரிக்கச் சென்ற போதே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
கடத்தப்பட்ட ஊடகவியலாளரை விரைவாக மீட்பதற்காக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) மற்றும் ஈராக் அதிகாரிகளுடன் இணைந்து அமெரிக்க வெளியுறவுத்துறை தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக டிலான் ஜான்சன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்