ஈரானை அதிரவைத்த அமெரிக்காவின் 12வது சுற்று தாக்குதல்: தகர்க்கப்பட்ட போர் விமானங்கள்
ஈரானின் கடல்சார், ஏவுகணை, ட்ரோன் சேமிப்பு மற்றும் வான் பாதுகாப்பு இலக்குகள் மீது 12-வது நாளாக அமெரிக்கா தீவிர தாக்குதல் நடத்தியதாக மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் ஈரானை பலவீனப்படுத்த செய்யபட்டவை என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவால் தெரிவிக்கபட்டுள்ளது.
ஈரான் தனது கடற்படை முற்றுகையை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதம் முழுவதும் ஈரானிய இராணுவத் தளங்களை அமெரிக்கப் படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் 12வது சுற்று தாக்குதல்
இதனால் அமெரிக்கப் படைகள் ஒன்பது வர்த்தகக் கப்பல்களை வேறு திசைக்குத் திருப்பிவிட்டதாகவும், ஒன்றைக் செயலிழக்கச் செய்துள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கின் பல நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் மற்றும் வசதிகளை குறிவைத்து ஈரானும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பெப்ரவரியில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் ஜூன் மாதத்தில் கட்டமைப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
எனினும், அந்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் இரு தரப்பினருக்கும் இடையிலான போர் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 7 மணி நேரம் முன்