ஈரானை நோக்கி பயணித்த கப்பலை முடக்கியது அமெரிக்க இராணுவம்
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை (Kharg) நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போட்ஸ்வானா நாட்டின் கொடியை ஏந்திய எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றை அமெரிக்க இராணுவம் முடக்கியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்க மத்திய கட்டளை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தங்களின் கட்டுப்பாடுகளை மீறி பயணித்த இந்த எண்ணெய் கப்பல், தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் எவ்வித எரிபொருளும் இன்றி காலியாக இருந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான எச்சரிக்கை
இந்தக் கப்பல் ஈரானிய எல்லைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக, அமெரிக்கப் படைகள் சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக தங்களது பயணப் பாதையை மாற்றுமாறு கப்பல் ஊழியர்களுக்குத் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

இருப்பினும், கப்பலின் மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து கார்க் தீவை நோக்கி முன்னேறியுள்ளனர் இதன் காரணமாகவே அமெரிக்க இராணுவம் கப்பலைச் செயலிழக்கச் செய்யும் இறுதி முடிவை எடுத்துள்ளது.
ஈரான் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து வகையான கடல்சார் போக்குவரத்தையும் அமெரிக்கா கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் முழுமையாக முற்றுகையிட்டு கண்காணித்து வருகினறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |