காசா விவகாரம் : ட்ரம்பிற்கு ஏற்பட்ட தோல்வி
'போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவை நாங்கள் எடுத்துக் கொள்வோம்; அங்கு சீரமைப்பு பணிகள் நடத்தப்படும்' என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) கூறியுள்ளதற்கு, பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு ராணுவத்தை அனுப்ப மாட்டோம் என, வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(benjamin nethanyahu) அமெரிக்காவுக்கு சென்று, டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார். நிருபர்கள் சந்திப்பின்போது, 'போரால் காசா பகுதி முழுமையாக சிதிலமடைந்துள்ளது. அந்த பகுதியை அமெரிக்கா எடுத்துக் கொள்ளும். அங்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வோம்' என, ட்ரம்ப் கூறியிருந்தார்.
ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
மேலும், காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மற்ற முஸ்லிம்கள் நாடுகளுக்கு அனுப்பப்படுவர் என்றும் அவர் கூறினார்.இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலினே லியாவிட் நேற்று கூறியுள்ளதாவது:
விளக்கமளித்த வெள்ளைமாளிகை
காசாவின் புனரமைப்பில் அமெரிக்காவின் பங்கும் இருக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விருப்பம். அதற்காக அந்த பகுதியை முழுமையாக கைப்பற்றி, உரிமையாக்கி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வோம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.
அதுபோல, அமெரிக்க ராணுவத்தை எந்தக் காரணம் கொண்டும் காசாவுக்கு அனுப்ப மாட்டோம். மேலும், காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் தற்காலிகமாகவே மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும். புனரமைப்பு பணிகளுக்குப் பின் அவர்கள் நாடு திரும்பலாம் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |