அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தீவிரம் காட்டவில்லை:இஸ்மாயில் பாகாயி
அமெரிக்காவுடனான "நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகள் என்பது முற்றிலும் முக்கியத்துவம் இல்லாத ஒரு விவாதப் பொருளாகும் என ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு ஈரானை ரஷ்யாவும் சீனாவும் ஊக்குவித்துள்ளனவா என்ற கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மேலும் குறித்த விடயத்தை ஒரு இரண்டாம் பட்ச விஷயமாகக் கருதி நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
"நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தோம். அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் மிக உயர்ந்த மட்டத்தில் கையெழுத்திட்டது, ஆனால் இந்த ஒப்பந்தம் இரண்டு வாரங்கள் கூட நீடிக்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தீவிரம் காட்டவில்லை” என்று ஜூன் மாத இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் குறிப்பிடுவது போல் அவர் மேலும் கூறினார்.

மரபுசார்ந்த பொருளில் ராஜதந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான தீவிரத்தன்மையும் விருப்பமுமே முக்கியப் பிரச்சினையாகும்.
ராஜதந்திரம் என்பது மற்ற தரப்பினரின் உரிமைகளையும் நலன்களையும் அங்கீகரிப்பதும், ஒருதலைப்பட்சமான சலுகைகளைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தவிர்ப்பதும், மற்ற தரப்பினருக்கு எந்தவொரு சலுகையையும் மறுப்பதைத் தவிர்ப்பதுமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |