நேரம் போதாது...! ட்ரம்பை அநுர உடனடியாக சந்திக்க வேண்டும் - பறந்த கோரிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நேரடியாக சென்று ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
இல்லாவிடின், எமக்கு நெருக்கடி ஏற்படும், நேரம் போதாது என்றும் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) அநுர அரசை எச்சரித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எமக்கு நெருக்கடி ஏற்படும்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது சீனாவைத் தவிர ஏனைய நாடுகளுக்கு 90 நாட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனை விடுத்து வரி நீக்கம் செய்யப்படவில்லை.
எமக்கு முன்னர் வேறு நாடுகள் சென்று அமெரிக்காவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைத்துக் கொண்டால் எமக்கு நெருக்கடி ஏற்படும். எனவே எமக்கு நேரம் போதாது.
விரைவில் இதற்கு பொறுத்தமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
இந்தியாவுக்கு விஜயம்
வரி விதிக்கப்பட முன்னரே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் இது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றார்.
அதற்கமைய அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இவ்வாரம் மோடியை சந்திப்பதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த 90 நாட்களுக்குள் ஏதேனும் செய்வதற்கு இந்தியா தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
சர்வதேச நாணய நிதியம்
இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பருவகால கூட்டத்துக்கு செல்லும் போது அமெரிக்காவின் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினரை சந்திக்கவுள்ளதாகக் கூறுகின்றனர்.
அவ்வாறான பேச்சுவார்த்தைகள் ஊடாக எதையும் செய்ய முடியாது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரடியாக சென்று ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
