மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்களிப்பு இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.
இதனையடுத்து நடைபெற்ற வாக்கெண்ணும் பணி முடிவடைந்து 267 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தனது வெற்றியுரையையும் ஆற்றுகிறார்.
தனது வெற்றி உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. குடியரசுக் கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் எனது நன்றி. மக்கள் என்னை நம்பித்தான் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது. வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக, தனது மனைவிக்கு உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்துக்கொண்டார் டிரம்ப்.
மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துக் கொண்டார்.
இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது. இதுவரை யாரும் காணாத ஆட்சியை அளிக்கப்போகிறேன். அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன், பிரச்சினைகளைத் தீர்ப்பேன்.
எனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது. அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன் என்றும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
புதிய இணைப்பு
அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தல் நேற்று (05.11.2024) நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில் 24 மாகாணங்களில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முன்னிலையில் உள்ளார்.
இதன்படி குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 267 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 214 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னேறியுள்ளார்.
நான்காம் இணைப்பு
அமெரிக்காவின் செனட் தேர்தலில் 51 ஆசனங்களை வெற்றி பெற்றதன் மூலம் செனட் சபையை கைப்பற்றியுள்ளதாக குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 248எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 214 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னேறியுள்ளார்.
முன்றாம் இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் படி, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 247 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 214 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னேறியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 230 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் (24 மாகாணங்களில் வெற்றி) - (51% வாக்குகள்)
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 210 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னேறி வருகிறார் (15 மாகாணங்களில் வெற்றி) - (47.6% வாக்குகள்)
முதலாம் இணைப்பு
அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தல் நேற்று (05.11.2024) நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில் 24 மாகாணங்களில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முன்னிலையில் உள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸிற்கு (Kamala Harris) இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
வாக்கு எண்ணும் பணி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 230 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை 24 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 192 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார் 15 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை.
கருத்துக் கணிப்பு
அட்லஸ் இன்டெல் போல் சார்பில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 49 சதவீத ஆதரவுடன் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கமலா ஹாரிசுக்கு 47.2 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் 1.8 சதவீத வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
இதேபோல் ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் ஒரு சதவீத வித்தியாசத்தில் டிரம்பை முந்தினார். கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவும், டிரம்ப் 43 சதவீத ஆதரவும் பெற்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |