இலங்கையின் சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கை (Sri Lanka) அரசாங்கம் நடத்தும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் கடந்தகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தகாத செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்கா (America) குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த விடயமானது கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான கடத்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சிறுவர்களை தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அரச சிறுவர் பராமரிப்பு இல்ல பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளில் எந்த முடிவுகளும் இல்லை.
போதிய ஆதாரங்கள்
அத்துடன், 2021 ஆம் ஆண்டில்15 வயது சிறுமியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர், இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்படை அதிகாரி ஆகியோருக்கு எதிரான வழக்கில் இலங்கையின் சட்டமா அதிபர் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறிவிட்டார்.
இதற்கிடையில், இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கு சிறுவர்கள் கடத்தல் மற்றும் தகாத செயற்பாடுகள் தொடர்பில் 36 முறைப்பாடுகளே கிடைத்துள்ளன.
சிறிலங்காவை வங்குரோத்தாக்கியவர்களை ரணில் தண்டிப்பதே நாட்டு மக்களுக்கான நற்செய்தி: பௌத்த தரப்பு சுட்டிக்காட்டு
சிறுவர் பராமரிப்பு நிறுவனங்கள்
எனினும், காவல்துறையினரின் தகவலின்படி 128 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பான இல்லங்கள் மற்றும் சுமார் 331 சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களை நடத்துகிறது.
அவை கடத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு சேவைகளை வழங்குகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |