ஈரான் நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா
ஈரானைச் சேர்ந்த 06 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா (United States) பொருளாதார தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் குறித்த நடவடிக்கையானது இஸ்ரேலுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவுக்கு சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனி (Ismail Haniyeh) இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் (Iran) போரை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் இஸ்ரேல் இராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டது.
இஸ்ரேல் எச்சரிக்கை
இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தத நிலையில், தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானைச் சேர்ந்த 06 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் (Matthew Miller) தனது எக்ஸ் (X) தளத்தில், "ஈரானின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறைகள் மீது பரந்த புதிய தடைகளை நாங்கள் அறிவிக்கிறோம்.
ஈரானிய ஆட்சி அதன் ஸ்திரமின்மை நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தக்கூடிய ஆதாரங்களை மேலும் மறுக்கிறோம். நாங்கள் 16 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளோம்.
ஏவுகணை திட்டம்
மேலும் ஈரானிய பெட்ரோலிய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் 23 கப்பல்களைத் தடை செய்துள்ளோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதனை ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
We are announcing broad new sanctions on Iran's petroleum and petrochemical sectors to further deny the Iranian regime the resources it may use to fund its destabilizing activities. We are also sanctioning 16 entities engaged in Iranian petroleum trade and blocking 23 vessels.
— Matthew Miller (@StateDeptSpox) October 11, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |