அமெரிக்க - சவுதி தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் அவசரமாக ஈரானுக்கு மாற்றம்
ஈராக்கிற்குள் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்பின் இலக்குகள் மீது அமெரிக்க-சவுதி இணைந்த நடத்திய வான்வழித் தாக்குதல்களில் காயமடைந்த பல ஈராக்கியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஈரானுக்கு மாற்றப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் இன்று(29)புதன்கிழமை தெரிவித்தன
ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்புடன், காயமடைந்தவர்கள் ஈராக்குடனான கோஸ்ரவி எல்லைக் வழியாக ஈரானுக்குள் நுழைந்ததாகவும், அங்கு அவர்கள் மேற்கு ஈரானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
காயமடைந்தவர்களின் நிலை
காயமடைந்த அனைவரும் சீரான நிலையில் இருப்பதாக ஆரம்பகட்ட மருத்துவ மதிப்பீடுகள் சுட்டிக்காட்டின என்றும் அந்த நிறுவனம் மேலும் கூறியது.

இந்த சம்பவம் குறித்து ஈராக்கிய அதிகாரிகள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் அறிவிப்பு
ஈராக்கில் ஈரானுடன் இணைந்த குழுக்களுடன் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் சவுதி படைகள் இணைந்து துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) புதன்கிழமை தெரிவித்தது.

இந்த நடவடிக்கை, அமெரிக்கப் படைகள் மற்றும் சவுதி எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்தது என்றும் அது கூறியது.
ஈரான் ஆதரவு பெற்ற ஷியா ஆயுதக் குழுக்களின் கூட்டணியான மக்கள் திரட்டல் படைகள் (PMF), இந்தத் தாக்குதல்களில் தங்களது பல தலைமையகங்கள் தாக்கப்பட்டதாகவும், இதில் குறைந்தது 20 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும், மேலும் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |