காசாவில் பொது போர் நிறுத்தத்தை எதிர்க்கும் அமெரிக்கா
காசாவில் பொதுவான போர் நிறுத்தத்தை மேற்கொள்வதில் உடன்பாடு இல்லலை என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 07 திகதி முதல் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது.
அதன்போது, ஹமாஸ் அமைப்பின் தளங்களை தேடித் தேடி இஸ்ரேல் அழித்து வருகிறது.
பொது போர் நிறுத்தம்
இந்த போர் தாக்குதல்களினால் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 24,762 பேர் மொத்தமாக கொல்லப்பட்டுள்ளனர். 62,108 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலோபாய தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் “பொது போர் நிறுத்தம்” கொண்டு வருவதை தனது நாடு எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் ஆதரவு
இந்த போர் நிறுத்தம் ஹமாஸ் படைகளுக்கு நன்மை செய்வதை விட வேறு யாருக்கும் நன்மை பயக்கும் என்று நாங்கள் நம்பவில்லை. அதே சமயம் நாங்கள் பிணைக் கைதிகளை மீட்க உதவும் மனிதாபிமான வெளியேற்றம் மற்றும் பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகள் ஆகியவற்றை வழங்க தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.
ஆனால் போர் நிறுத்தத்திற்கு இந்த நேரத்தில் நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 6ம் திகதி போர் நிறுத்தம் இருந்தது என்பது நினைவு படுத்துவது முக்கியம் என்று கருதுகிறேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |