மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் : இந்திய பெருங்கடலில் ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா
தெஹ்ரானுக்கு எதிரான தனது தொடர்ச்சியான பொருளாதாரத் தடை அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடலில் ஈரான் தொடர்புடைய எண்ணெய் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்கை வேவ் என்ற அந்தக் கப்பல் ஈரானிய எண்ணெயைக் கொண்டு சென்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், அமெரிக்கா மார்ச் மாதம் அதன் மீது தடைகளை விதித்தது
மலாக்கா நீரிணைவழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல்
ஸ்கை வேவ் கச்சா எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டபோது, அது மலேசியாவிற்கு மேற்கே மலாக்கா நீரிணைவழியாகச் சென்று கொண்டிருந்ததாகவும், பெப்ரவரி மாதம் ஈரானின் கார்க் தீவிலிருந்து ஏற்றப்பட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெயை அது ஏற்றிச் சென்றதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானுடன் தொடர்புடைய மேலும் குறைந்தது மூன்று எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தற்போது கைப்பற்றியுள்ளதாகவும் அந்த ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பென்டகன் உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை
ஈரானிய கச்சா எண்ணெயை வாங்கும் சீன சுத்திகரிப்பு ஆலைகளுக்கு எதிரான நடவடிக்கை உட்பட, ஈரானின் எண்ணெய் வர்த்தக வலையமைப்பு மீது அமெரிக்கா தனது விரிவான பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து விதித்து வரும் வேளையில் இந்தக் கைப்பற்றல் நிகழ்ந்துள்ளது.

இந்த எண்ணெய்க் கப்பல் கைப்பற்றல் குறித்து பென்டகன் உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |