நிராகரிக்கப்பட்ட ட்ரம்பின் 200 பில்லியன் டொலர் கோரிக்கை! இஸ்ரேலுக்கு முக்கிய ஆயுதங்கள் அனுப்ப தடை
ஈரான் மீதான போருக்கு நிதியளிப்பதற்காக பென்டகன் கோரிய 200 பில்லியன் டொலர் கூடுதல் நிதியை அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் பீட்டர் வெல்ச் (வெர்மான்ட்) வெளிப்படையாக நிராகரித்துள்ளார்.
அதே நேரத்தில், இஸ்ரேலுக்கு கிட்டத்தட்ட 660 மில்லியன் டொலர் மதிப்பிலான பெரிய குண்டுகள் (bombs) உள்ளிட்ட ஆயுதங்கள் அனுப்பப்படுவதைத் தடுக்கும் மூன்று தீர்மானங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
செனட் தளத்தில் பேசிய செனட்டர் வெல்ச்,
முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம்
“இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் இது. நான் இந்த 200 பில்லியன் டொடர் நிதியை எதிர்ப்பேன். என்றென்றும் போரில் தூங்கிச் செல்வதை (forever war) எதிர்ப்பேன்” என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது

“இந்தப் போர் அரசியலமைப்புக்கு முரணானது. இது அமெரிக்காவின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி, பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது. காங்கிரஸில் இதுவரை ஒரு விவாதம் கூட நடைபெறவில்லை” என்றார்.
பென்டகன், ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு ஆயுத இருப்பை நிரப்புவதற்காக இந்த பெரும் தொகையை வெள்ளை மாளிகைக்கு கோரியுள்ளது.
பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் “கெட்டவர்களை ஒழிப்பதற்கு பணம் தேவை” என்று கூறியிருந்தார். இந்தக் கோரிக்கை காங்கிரசில் பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
ரிபப்ளிகன் செனட்டர் ஜான் கென்னடியும், நிதி வழங்குவதற்கு முன் பொது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் விவகாரம்
இஸ்ரேல் விவகாரத்தில், செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் முன்மொழிந்த மூன்று Joint Resolutions of Disapproval (JRDs) க்கு செனட்டர் வெல்ச் உட்பட சில டெமாக்ரட் செனட்டர்கள் (கிறிஸ் வான் ஹாலன், ஜெஃப் மெர்க்லி) ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்மானங்கள் இஸ்ரேலுக்கு சுமார் 20,000 குண்டுகள் மற்றும் தொடர்புடைய ஆயுதங்களை அனுப்புவதைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெல்ச், “ஏற்கனவே அனுப்பப்பட்ட அமெரிக்க குண்டுகளால் இஸ்ரேல் ஈரானில் மொத்தப் போரை (total war) நடத்தி வருகிறது.
மேலும் 20,000 குண்டுகளை அனுப்ப அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 23 மணி நேரம் முன்