சிதைந்தது ஈரான் புரட்சிகர காவல் படையின் தலைமையகம்! அமெரிக்காவின் துல்லிய தாக்குதல்
வடக்கு ஈரானில் உள்ள புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமையகத்தை இலக்கு வைத்து அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வளாகத்தின் சில உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஈரானிய அரசு ஊடகமான செய்தி வெளியிட்டுள்ளது.
காஸ்பியன் கடற்பகுதியில் அமைந்துள்ள ஜிபகெனார் கிராமத்தில் உள்ள IRGC கடற்படைத் தலைமையகத்தையே இந்தத் தாக்குதல் இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஏனைய இலக்குகள்
எனினும், இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

Image Credit: Council on Foreign Relations
இதேவேளை, வியாழக்கிழமை இரவு ஈரான் மீது தொடர்ச்சியாக 13-வது இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், "ஈரானிய இராணுவக் கட்டளை மையங்கள், ட்ரோன் சேமிப்பு வசதிகள், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள், கடலோரக் கண்காணிப்பு மையங்கள் மற்றும் கடல்சார் திறன்கள்" ஆகியவற்றைக் இலக்கு வைத்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தாக்குதல்கள் நடத்தப்பட்ட குறிப்பிட்ட இடங்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |