ஈரானில் மீண்டும் பதற்றம்! சரமாரியாக தாக்கத் தொடங்கிய அமெரிக்கா
ஈரானில் உள்ள பல்வேறு இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளதாக CENTCOM அறிவித்துள்ளது.
ஈரானின் தேவையற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதல்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைதி உடன்படிக்கை
ஈரான் உடன்படிக்கைக்கு வர மறுப்பதாலேயே இந்த கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
U.S. Central Command forces began launching additional self-defense strikes today at 5:15 p.m. ET against multiple targets in Iran at the Commander in Chief’s direction. The strikes are in response to Iran’s unwarranted and continued aggression.
— U.S. Central Command (@CENTCOM) June 10, 2026
இந்த நிலையில், தெற்கு ஈரானில் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள மினாப் மற்றும் சிரிக் ஆகிய பகுதிகளில், அதிகாலையில் பல எதிரி ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக ஈரானிய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 20 மணி நேரம் முன்