ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா! மீண்டும் ஆதரவளித்த அமெரிக்கா
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில்(United Nations Security Council) இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பு நாடுகளைக் கொண்டமைந்துள்ளது.
இதில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் இரண்டு ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
நிரந்தர உறுப்பினர்
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமென இந்தியா கோரிய நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு கவுன்சில்
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல்(Vedant Pate) கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் வாழும் 21 ஆம் நூற்றாண்டில் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம்.
அத்தோடு அது என்ன என்பது குறித்து என்னிடம் எந்த விவரமும் இல்லை ஆனால் நிச்சயமாக நாங்கள் அதை அங்கீகரிக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |