இந்தியாவுக்கான அமெரிக்க ஆதரவு: வெளியான அறிவிப்பால் தவிடுபொடியான நம்பிக்கை!
“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை” என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் (US) ஆயுதங்களை கீழு போடுமாறு இந்தியாவுக்கும் கூறமுடியாது பாகிஸ்தானுக்கும் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளர்.
விலகும் அமெரிக்கா
அமெரிக்காவின் கட்டுப்படுத்தும் திறனுடன் எந்த தொடர்பும் இல்லாத போரின் நடுவில் நாங்கள் ஈடுபடப் போவதில்லை என ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
எனினும், வான்ஸும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இரு நாடுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிக்க ஊக்குவிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, சர்வதேச மோதல்களில் இருந்து அமெரிக்கா விலகுவதை ஆதரிப்பவராக இருக்கும் வான்ஸ், இராஜதந்திர வழிகள் மூலம் இந்த விடயத்தில் நடவடிக்கைகளை தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நம்பிக்கை
அத்துடன், இது ஒரு பரந்த பிராந்தியப் போராகவோ அல்லது ஒரு அணுசக்தி மோதலாகவோ மாறப் போவதில்லை என்பதே தங்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்களை தொடர்ந்தால் அமெரிக்கா நிச்சியமாக இந்தியாவுக்கு ஆதரவாக தாக்குதல்களை தொடங்கும் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி இந்த கருத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
