வெளிநாடொன்றை சுற்றிளைத்து படையெடுக்கும் அமெரிக்கா.! அதிகரிக்கும் பதற்றம்
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்க ராணுவம் பெரிய அளவில் படைகளை குவித்திருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் நடைபெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
வெனிசுலா மறுப்பு
இதனையடுத்து பசிபிக் மற்றும் கரீபியன் கடற்பகுதியில் சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது அமெரிக்கா கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ முழுமையாக மறுத்துள்ளார்.

Image Credit:
Al Jazeera
இந்நிலையில், “ஆபரேசன் சதர்ன் ஸ்பியர்” என்ற பெயரில் 12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களும், சுமார் 15,000 அமெரிக்க படையினரும் கரீபியன் கடலில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்பின் அறிவிப்பு
இந்த நடவடிக்கைகள் வெனிசுலாவுக்கு எதிரான ராணுவத் தலையீட்டுக்கான முன்னேற்பாடாக இருக்கலாம் என்ற அச்சத்தை அங்கு உருவாக்கியுள்ளது.

Image Credit:
ABC News
இதைத் தொடர்ந்து, வெனிசுலா ஜனாதிபதி மதுரோ, நாட்டில் அவசர பாதுகாப்பு நிலையை அறிவித்து, நிலம், கடல் மற்றும் வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் பிராந்தியம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை குறித்து பேசும்போது, “நான் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்துவிட்டேன்; ஆனால் அதை இப்போது வெளிப்படுத்த முடியாது, விரைவில் அறிவிப்பேன்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்