ஈரானின் அணு ஆயுத திட்டம்: ட்ரம்பின் நிர்வாகம் விடுத்த கடும் எச்சரிக்கை
ஈரான்(Iran) தனது அணு ஆயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) நிர்வாகம் எதிர்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ்(Mike Waltz) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ உலகம் பார்க்கக்கூடிய விதத்தில் ஈரான் தனது திட்டத்தை கைவிடவேண்டும்.
ஈரானின் அணு ஆயுத திட்டம்
அணுவாயுதங்களை உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து ஈரான் விலகுவதற்கான தருணம் இது.
ஈரான் அணு ஆயுத திட்டங்களைத் தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
யேமனின் ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய அனைத்துத் தாக்குதலிற்கும் ஈரானே காரணம் என கருதப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே வெள்ளைமாளிகையின் தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 21 மணி நேரம் முன்
