அதிர வைக்கும் ட்ரம்ப் - இலங்கைக்கு விதிக்கப்பட்ட பாரிய வரி: ஆட்டம் காணவுள்ள பொருளாதாரம்
அமெரிக்கா (USA) விதித்துள்ள வரி உள்ளூர் கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை தமது கடல் உணவுகளில் சுமார் 25 வீதத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் பேச்சுவார்த்தை
எனினும், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா குறைந்த வீதத்திலான வரியை அறிவித்துள்ளதால், அது இலங்கையின் கடலுணவு ஏற்றுமதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, பிராந்திய ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு இலங்கைக்கான வரியை மேலும் குறைக்க, 2025 ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
44 வீத வரியை விதிப்பதாக ஏப்ரல் 2 ஆம் திகதி ட்ரம்ப் முதலில் அறிவித்திருந்த போதிலும், நேற்று இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் அந்த எண்ணிக்கையை 30 வீதமாகமாக குறைந்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை இறக்குமதிகள் மீது அமெரிக்கா விதித்த 30% வரியை மேலும் குறைக்க இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை வரி நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ள 9 ஆம் திகதி வரை தொடருமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
