கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
vaccine
sri lanka
people
By Shalini
கொழும்பில் சுமார் 24,000 மாணவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி விவேகானந்தா, தேர்ஸ்டன், விஷாகா, பெனடிக் ஆகிய கல்லூரிகளில் இந்த தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு கல்வி வலய பணிப்பாளர் ஜீ.என்.சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் சகல கல்வி வலயங்களிலும் இந்த முறை கல்விப் பொதுத்தராதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை வைத்திருத்தல் அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.