தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் மனித வெடிகுண்டாக செயல்படுகிறார்கள் - கடுமையான எச்சரிக்கை
கொவிட் - 19 தடுப்பூசியைப் பெறுவதால் கருவுறமுடியாது அல்லது பாலியல் ரீதியான சிக்கல்கள் ஏற்படலாம் என்ற எவ்வித அடிப்படைகளுமற்ற நிலைப்பாடுகளினால் பல இளைஞர், யுவதிகள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்று விசேட வைத்தியநிபுணர் பிரியங்கர ஜயவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே நாடளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கப்படும் வயதுப்பிரிவில் உள்ளடங்குகின்ற அனைவரும் தமது நலனையும் சமுதாயத்தின் நலனையும் கருத்திற்கொண்டு விரைவில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
நிச்சயமாக வசந்தம் உதயமாகும்' என்ற தலைப்பில் ஊடக அமைச்சுடன் இணைந்து இலங்கை இலத்திரனியல் ஊடக அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,